தமிழ் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அசைவ உணவகங்கள் தயாரிக்கும் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினா்.
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழ் நாடு முழுவதும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் தயாரிக்கும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் அழகாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சுமார் 200 கிலோ தரமற்ற சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிகளில் அசைவ உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை மேற்கொண்டனா். அப்போது, 14 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
கரூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனா். அப்போது, கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனா்.
இதையும் படிக்க | 'காற்றில் பறந்த கல்விக் கடன் ரத்து' குற்றம்சாட்டும் எடப்பாடி!