தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயிர்கடன் தள்ளுபடி - பெருமிதத்தில் தமிழக அரசு

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ரூபாய் 10 ஆயிரத்து 361 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயிர்கடன் தள்ளுபடி - பெருமிதத்தில் தமிழக அரசு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்....

ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பண்ணன்.....
 

மேலும் படிக்க| பெரியார் குடும்ப வாரிசு திருமகன் ஈவெரா மறைவு - வைகோ அதிர்ச்சி
பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய  2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார், அந்த அறிவிப்பினை நிறைவேற்றுகின்ற பொறுப்பு உணவுத்துறைக்கும், கூட்டுறவு துறைக்கும் உள்ளதாகவும் அது பற்றிய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றது என்பதை இன்று ஆய்வு செய்வதாகவும் கூறினார்...

மேலும் பேசிய அவர் பொங்கல் தொகுப்பை முறையாக வழங்க வேண்டும் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் இருக்கக் கூடாது என்பதற்காக நேற்று முதல் அனைத்து கடைகளிலும் டோக்கன் வழங்கப்படுவதாகவும் 8ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் நடைபெற உள்ளதாகவும் 9ஆம் தேதி முதல்வர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்....

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இருக்கக்கூடிய 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் தற்போது 4,45 கடைகள் ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற கடைகளாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய கடைகள் தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக இதே தரத்தில் மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்......

பொங்கலுக்கு வழங்கப்படும் ரொக்கம் ரூபாய் ஆயிரம்  பொருட்கள் வழங்கும்பொழுது நியாய விலை கடைகளில்  வழங்கப்படும் வங்கிகளில் தற்போது கொடுக்கின்ற உத்தேசம் இல்லை எனக் கூறிய அவர் குறைபாடு இல்லாமல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படும் அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்....

தேவைப்படுகின்ற பற்றாக்குறை இருக்க கூடிய விற்பனையாளர்கள் போன்ற பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க செய்து அவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்...

மேலும் பேசிய அவர் கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சர் ஆக இருந்த அவர் நானும் ஒரு விவசாயி தோழன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் பத்தாண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் அவர்கள் வழங்கிய பயிர் கடன் ஆண்டு ஒன்றுக்கு 6000 கோடி சராசரியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் மட்டும் 10, 292  கோடி ரூபாய் விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை 10 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தமிழக வரலாற்றில் இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்....

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தர்மபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பைலட் முறையில் ராகி விநியோகிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராகி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதன் பிறகு விரைவில் அந்த இரண்டு மாவட்டங்களிலும் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி வழங்கப்படும் எனக் கூறினார்....
 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com