74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

74வது குடியரசு தின விழா: மூவர்ண கொடியேற்றிய தமிழ்நாடு ஆளுநர்...!

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.

மூவர்ணக் கொடியை ஏற்றிய ஆளுநர் :

நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காவல்துறை வாகன அணிவகுப்புடன் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதிக்கு இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் சென்றனர். பின்னர் சரியாக காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, உழைப்பாளர் சிலை அருகே மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 

இதைத்தொடர்ந்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியக்குழு உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதை ஆளுநர் ஏற்று கொண்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com