நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறும் துணை வேந்தர்கள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ரவி, பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள் கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!
தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன் வருவதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த ஆளுநர், தமிழகத்தில் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.