”கருணாநிதி காலத்தில் நடக்காதது; ஸ்டாலின் காலத்தில் நடக்கிறது” ஜார்கண்ட் ஆளுநர் விமர்சனம்!

”கருணாநிதி காலத்தில் நடக்காதது; ஸ்டாலின் காலத்தில் நடக்கிறது” ஜார்கண்ட் ஆளுநர் விமர்சனம்!

தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வது தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது என்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தடைந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளதாக விமர்சனம் செய்தவர்,  கருணாநிதி காலத்தில் நடைபெறாதவை எல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதாகவும், தமிழ்நாடு இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

வெடிகுண்டு வைத்தவர்களை எல்லாம் விடுதலை செய்வதும், தியாகிகளை போல் கொண்டாடுவதும் என்றால் பிறகு எப்படி ஜனநாயகம் தலைத்தோங்கும்? எப்படி மக்களாட்சி தொடர்ந்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய இயலும்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் உணவுகள் வீணாவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவதற்கு அரசு முயல வேண்டும்' என்று கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com