வியாபாரிகள் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை...விக்ரமராஜா அதிருப்தி!

வியாபாரிகள் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை...விக்ரமராஜா அதிருப்தி!

தமிழகத்தில் வியாபாரிகள் புகார் அளித்தால், வியாபாரிகளை அலைக்கழித்து, எங்களால் இவ்வளவு தான் முடியும் என்ற ஒரு சோர்வான பதிலை காவல்துறையினர் சொல்லி வருகிறார்கள்.

வணிகர் சங்க பொதுக்குழு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தினுடைய பொதுக்குழு கூட்டம்,மாவட்ட தலைவர் ரங்கநாதன்  தலைமையில் காஞ்சிபுரத்தில்  நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமா ராஜா கலந்து கொண்டு வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, வணிகர் சங்கங்களின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

வியாபாரிகள் புகார் மீது அலட்சியம்

தமிழகத்தில் வியாபாரிகள் புகார் அளித்தால் வியாபாரிகளை அலைக்கழித்து எங்களால் இவ்வளவு தான் முடியும் என்ற ஒரு சோர்வான பதிலை காவல்துறையினர் சொல்லி வருகிறார்கள் என்றும், வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காவல்துறையினருக்கு தெரிவிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது.

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

ரவுடிகள், மாமுல் வாங்குகின்றவர்கள், பொருட்களை வாங்கிவிட்டு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் செல்பவர்கள் ஆகியோரை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும் தெரிவிக்க உள்ளதாக விக்ரமா ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.