வி.சி.க-வை ஒரு கட்சியாக ஏற்காத நிலையை காவல்துறை உருவாக்கியுள்ளது- திருமா காட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான வழக்கு மற்றும் கைது சம்பவங்கள் கட்சியின் நன்மதிப்பை களங்கப்படுத்தும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
வி.சி.க-வை ஒரு கட்சியாக ஏற்காத நிலையை காவல்துறை உருவாக்கியுள்ளது- திருமா காட்டம்!
Published on
Updated on
1 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான வழக்கு மற்றும் கைது சம்பவங்கள் கட்சியின் நன்மதிப்பை களங்கப்படுத்தும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 130-வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் நகரில் வைக்கப்பட்டுள்ள அவருடைய படத்திற்கு திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒரு கட்சியாகவே ஏற்கவில்லை எனும் நிலை உருவாகியுள்ளதாக கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறிய திருமாவளவன், காவல்துறையினர் பலர் சாதிய எண்ணத்தில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com