”தேயிலையும், சுற்றுலாவும் பொருளாதார முதுகெலும்பாக திகழ்கின்றது” - அமைச்சர் பெருமிதம்!

”தேயிலையும், சுற்றுலாவும் பொருளாதார முதுகெலும்பாக திகழ்கின்றது” - அமைச்சர் பெருமிதம்!

தேயிலையும், சுற்றுலாவும் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக திகழ்வதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சியை தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த கண்காட்சியில், திராட்சை, மாதுளம், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொண்டு பழக்கூடை, மண்புழு, 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அன்னாசி பழம் போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பின்னர் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட தேயிலை தூளை நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், தேயிலையும், சுற்றுலாவும் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக திகழ்வதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com