அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கில் ஆர் எஸ் பாரதியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
2018ம் ஆண்டு ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடர்ந்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனையடுத்து, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக, கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதையும் படிக்க | நீட் தேர்வு; சீட் கிடைத்தும் கல்லூரியில் சேராதவர்களுக்கு தடை!