மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி  

சென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.
மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி   

சென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.

ஒடிசாவை சேர்ந்த கமலகாந்த் பரிக் என்பவர் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி மற்றும் பதினைந்து மாத ஆண் குழந்தை  ஹிமாசு பரிக்குடன் அங்கேயே தங்கி பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com