மின் வயறை கையில் எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி உறவினரகள் சாலை மறியல்

மின் வயறை கையில் எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி உறவினரகள் சாலை மறியல்

திண்டிவனம் அருகே அறுந்து கிடந்த மின் பயறை கையில் எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி-உறவினர்கள் சாலை மறியல்.


 திண்டிவனத்தில் கடந்த  இரண்டு நாட்களுக்கு முன் கனமழை பெய்தது.இதனால் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மின்சாரம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் பல்வேறு இடங்களில் தரப்பட்டது.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்தில்  யுவனேஸ்வரன் என்ற நான்கு வயது சிறுவன் வேங்கை கிராமத்தில் உள்ள அவனது வீடு அருகில் விளையாடி கொண்டிருந்தான் அப்பொழுது 
அறுத்து கிடந்த மின் உயிரை கையில் எடுத்ததால் அவன் மீது மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தான்.

இதையடுத்து மின்துறையின் மெத்தனம் போக்கால் சிறுவர்  உயிர் இழந்ததாக கூறியும், மெத்தன போக்காக செயல்பட்ட மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேங்கை பொதுமக்கள் மற்றும் யுவனேஸ்வரனின் குடும்பத்தினர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com