சிவசங்கர் பாபா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை....  சம்ரட்சனா அட்மின் ஜானகியை விசாரித்தால் பல திருப்பங்கள் தெரியவரும்... சண்முகராஜா பரபரப்பு பேட்டி...

சிவசங்கர் பாபா மீது  போடப்பட்டுள்ள வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்று நடிகரும், சிவசங்கர்பாபா ஆதரவாளருமான சண்முகராஜா கூறியுள்ளார்.
சிவசங்கர் பாபா மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை....  சம்ரட்சனா அட்மின் ஜானகியை விசாரித்தால் பல திருப்பங்கள் தெரியவரும்... சண்முகராஜா பரபரப்பு பேட்டி...

நடிகரும், சிவசங்கர்பாபா ஆதரவாளருமான சண்முகராஜா சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான சண்முகராஜா பேசும்போது,

சம்ரட்சனாவின் அட்மின் பொறுப்பிலிருக்கும் ஜானகி சீனிவாசன் சாதிய மனோபாவத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக பாபா மீது பக்தியுடன் இருந்த அடித்தள மக்களை விரட்டி அடிப்பது பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்து சான்றிதழ் கொடுத்து அனுப்புவது கட்டிட பணியில் இருந்து எல்லா பணிகளையும் ஊழல் செய்து கமிஷன் அளிப்பது என குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் நிர்வாகி ஜானகியின் அத்தனை செயல்களுக்கும் பாஜகவை சேர்ந்த கே.டி ராகவன் துணையாக இருக்கிறார்.

மேலும் தற்போது சிவசங்கர் பாபா சிறையில் இருக்கும் சமயத்தில் ஜானகி குழுவினர் பிராமணர் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து பாபா பிரசாதம் கொடுத்த கோவில்களை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் சாவி கொடுக்க மறுத்த பிற சாதியினரின் கோயில் கதவுகளை உடைத்து கோயில்கள் அத்துமீறி நுழைந்து உள்ளதாக தெரிவித்தனர். குகை நமச்சிவாயர் கோயில் கதவை உடைத்ததை தட்டிக் கேட்ட பெண்மணியினரை தாக்கியதாகவும் மேலும் அந்த சம்பவம் நடந்தபோது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கேடி ராகவன் அடியாட்களுடன் இருந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது பாபா சிறையில் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக பாபா மீது பொய் வழக்குகளை இவர்கள் ஜோடித்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார். ஜானகியின் உத்தரவில்லாமல் வளாகத்தில் அணுவும் அசையாது அப்படி இருக்கையில் ஜானகியின் அவரது கூட்டாளிகளும் கைது செய்து விசாரித்தால் புதிய திருப்பங்கள் உருவாகும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com