வரி உயர்வால் கஜானாவை நிரப்பிய சென்னை மாநகராட்சி...!

வரி உயர்வால் கஜானாவை நிரப்பிய சென்னை மாநகராட்சி...!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வரி மூலம்  945 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களுக்கு உட்பட்டு 200 வார்டுகள் உள்ளன. சொத்து வரி மற்றும் தொழில் வரி அதிகரிக்கப்பட்ட நிலையில்  2022-23 ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் வரி வசூல் விவரத்தை சென்னை மாநகாரட்சி வெளியிட்டுள்ளது. 

கடந்த 2021-2022  நிதியாண்டில் மொத்தமே 1240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வசூலாகியுள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது . 

இதில் சொத்து வரி மூலம் 697 கோடி ரூபாயும், தொழில் வரி  மூலம் 248 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட 345 கோடி கூடுதல் வரி வசூல் வந்துள்ளது எனவும் தெரவித்துள்ளது. இதன்படி பார்த்தால், 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் 1700கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மாநகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்க  பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகள், தொழிற்சாலைகள் , நட்சத்திர விடுதிகள் குடியிருப்புகளின் அளவுகளை மறு மதிப்பீடு செய்து அதற்கேற்ப  வரிவசூலிக்க மாநகாரட்சி திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com