பிறந்த நாளை மாணவிகளுடன் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினார் முதலமைச்சர்...!

பிறந்த நாளை மாணவிகளுடன் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினார் முதலமைச்சர்...!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் ஒன்றாம் தேதி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செவி திறன் மற்றும் பார்வை  சவால் உடைய பள்ளி மாணவர்களுடன் இணைந்து முதலமைச்சர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். அப்போது, பிரம்மாண்ட கேக்கை வெட்டிய முதலமைச்சர், அருகில் இருந்த சிறுமிகளுக்கு தனது கையால் கேக் ஊட்டிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிறந்த நாள் விழாவில் பேசிய முதலமைச்சர், தனது பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் இந்த பள்ளிக்கு வருகை தருவதாக தெரிவித்தார். தனக்கும் இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்குமான அன்பு என்றும் மாறாது என்று சொன்ன முதலமைச்சர், ஆண்டுக்கு 3 மற்றும் நான்கு முறை பிறந்தநாள் வந்தால், உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நெகிழ்ச்சி தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com