அம்மா உணவகம் தொடர்பாக ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி...அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர்!

அம்மா உணவகம் தொடர்பாக ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி...அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

அம்மா உணவகத்தில் எந்த இடத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த 3 நிதிநிலை அறிக்கைகளில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றார். இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை என்றும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தரமான சுவையான உணவு தயார் செய்ய தேவையான பொருட்கள் இல்லாததால் அம்மா உணவகத்திற்கு வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களில் எங்கு தரமான உணவு வழங்கப் படவில்லை என்று தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அம்மா உணவகங்கள் மூடப்படுவதாக திட்டமிட்டு செய்திகள் வெளியிடப் படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com