பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
திமுக தொண்டர்கள் ஊர்வலம் :
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர். அந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : தனித்தனியாக சென்ற அதிமுகவினர்...சொன்னது என்ன?
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை:
தொடர்ந்து பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கியன்றே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும், அதனால் ஆசிரியர்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.