தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று சென்னையில் கன மழை பெய்தது. மேலும், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் இன்று (12.11.2022) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், சேலம். கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, தருமபுரி,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தற்போது மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மாணவர்கள் இடையே திடீர் மோதல்... வாகனத்தை அடித்து நொறுக்கி ஆவேசம்...