டெல்டா பிளஸ் தொற்றை தாக்குபிடிக்குமா தடுப்பூசி...விரைவில் வருகிறது ஆய்வு முடிவு...

டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுகிறதா என்ற ஆய்வின் முடிவு 10 நாட்களில் வரும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்டா பிளஸ் தொற்றை தாக்குபிடிக்குமா தடுப்பூசி...விரைவில் வருகிறது ஆய்வு முடிவு...
Published on
Updated on
1 min read
தமிழகத்தில் இரண்டாவது அலையில் அதிகபட்ச பாதிப்புகள் கண்டறியபட்ட நிலையில் பாதிப்பிற்கான காரணம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமுதாய பரவல் குடும்ப வழி பரவல், மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள்,  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என பல்வேறு வகைப்பாட்டின் அடிப்படையில் 1159 மாதிரிகள் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபு குறித்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. 
அதில் 556 மாதிரிகளுக்கான முடிவுகள் வெளியாகிய நிலையில் ஒரு டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்று உட்பட 386 நபர்களுக்கு டெல்டா வகை கொரனோ பாதிப்புகள் கண்டறியப்பட்டது. மேலும் 47 நபர்களுக்கு ஆல்பா வகை பாதிப்புகள் மற்றும் 9 பேருக்கு டெல்டா + கொரொனா தொற்று இருப்பதை அதே சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக கொரொனா தடுப்பூசி செயல்படுகிறதா என்பது குறித்தான ஆய்வினை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்ட முடிவில் இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று முடிவு வந்திருக்கும் நிலையில் அந்த முடிவினை இன்னும் 7 -10  நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரியவந்துள்ளது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com