இனிதே நிறைவடைந்தது உணவு திருவிழா!

இனிதே நிறைவடைந்தது உணவு திருவிழா!
Published on
Updated on
1 min read

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற வரும் உணவுத் திருவிழா மற்றும் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கி சென்றனர்.

சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்கள் உணவு திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து மே 15 ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் மே 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

இந்த பொருட்காட்சியில் மொத்தமாக 311 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகில் நைஜீரியா தென்னாப்பிரிக்கா இலங்கை போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களை இந்த பொருட்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். இந்தியாவின் 20 மாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் 80 அரங்குகளில் தங்களுடைய பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

மேலும் தமிழகத்தில் சுய உதவி குழு மகளிர் சார்பில் தயாரிக்கப்பட்ட சேலைகள், வீட்டு உபயோக பொருட்கள், பசுமை ஆபரணங்கள் உள்ளிட்டவையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த பொருட்காட்சி இன்றுடன் நிறைவு பெறக்கூடிய நிலையில் ஏராளமான பொதுமக்கள் பொருட்காட்சியில் பங்கேற்று தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com