உயர்கல்வி படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் வேலை தருபவர்களாக இருக்க வேண்டும்:
விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு இல்லை:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு இல்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்து விட்டோம் என கூறினார்.
மேலும் தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் கல்விக்கும் தடையாக இருக்கும் என குறிப்பிட்டார். பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்காக, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக ஆளுநர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் பொன்முடி கூறினார்.