மனித உரிமை ஆணைய உத்தரவு செல்லும்...வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

மனித உரிமை ஆணைய உத்தரவு செல்லும்...வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

பொய் வழக்கு பதிவு செய்த காவலர்களுக்கு மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை  உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் பாபு மற்றும் அசோக் இருவரையும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி பொய் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல் சிறையில் அடைத்தனர். 

பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். 

புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், இந்த வழக்கில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட  இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை நான்கு காவலர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. மேலும் நான்கு காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது. 

இதனை எதிர்த்து காவலர்கள் நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுப்பட்டது உறுதி படுத்தப்பட்டுள்ளதால் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி காவலர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com