அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு...வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு...வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி டாஸ்மாக் மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்து வருவதாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அரசு ஒப்பந்தாரர்களுடைய இல்லங்கள் மற்றும் அலுவலங்கள் என தமிழ்நாட்டில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இந்த திடீர் சோதனை குறித்து வெளியான முதற்கட்ட தகவலில், இந்த சோதனையானது ஒப்பந்தங்களில் நடைபெற்ற வரி ஏய்ப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெறும் இந்த திடீர் சோதனை அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com