தி கேரளா ஸ்டோரி வெளியீடு - 6 இடங்களில் போராட்டம் கூடுதல் காவல் பாதுகாப்பு !!!

தி கேரளா ஸ்டோரி வெளியீடு - 6 இடங்களில் போராட்டம் கூடுதல் காவல் பாதுகாப்பு  !!!
Published on
Updated on
1 min read

சென்னையில் 15 இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 இடங்களில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் கேரள பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று டிரெய்லரில் காட்சிகள் வெளியானது. இந்த திரைப்படத்தின் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

அனைத்து திரையரங்குகளிலும் உரிய பாதுகாப்பு

இதனால் தமிழகம் முழுவதும் இன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம்  வெளியாவதை ஒட்டி இஸ்லாமிய அமைப்புகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

 பல சர்ச்சைகளை கடந்து நாடு முழுவதும் வெளியீடு

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று பல திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் ஒரு திரையரங்கில் 10 போலீசார் என மொத்தம் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திரைப்படத்திற்கு செல்லக்கூடிய நபர்களை முழுவதுமாக சோதனை செய்தும், அவர்களின் விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.  மேலும் சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com