அதிமுக அலவலக சாவி விவகாரத்தில் அடுத்த நகர்வு.. எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!!

அதிமுக அலவலக சாவி விவகாரத்தில் அடுத்த நகர்வு.. எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!!
Published on
Updated on
1 min read

அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் ஏற்பட்டது.

இபிஎஸ்- யிடம் அதிமுக அலுவலகம் சாவி

இதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20ம் தேதி இவ்வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடிபழனிச்சாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com