
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டில் 3 கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், அனைத்துமே பெண்கள் கல்லூரிகள் என நினைவு கூர்ந்தார்.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் அது முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.