ஆவின் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி கண்டனம்!

ஆவின் பச்சை நிற பால் விற்பனையை தமிழ்நாடு அரசு நிறுத்தக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச்சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதியுடன் நாளுடன்  நிறுத்தவும், அதற்கு மாறாக  3.5% கொழுப்பு சத்து கொண்ட  ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றரை சதவீதம் என்ற குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் பாலுக்கு, நான்கரை சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை வசூலிப்பது மறைமுகமான விலை உயர்வு என விமர்சித்துள்ளார்.

தனியாருக்கு சாதகமாக அமையும் இந்த விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன், நிர்வாக சீர்கேடுகளை களையவில்லை எனில், ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com