நாளை  நடைபெறுகிறது இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்...

நாளை நடைபெறுகிறது இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்...

நாளை இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்  நடைபெறும் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு  வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அனுப்பும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.  . இதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நிறைவடைந்த  நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள வாக்கு மையங்களுக்கு தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு, தேவையான வாக்காளர் பட்டியல், நான்கு பதவிகளுக்கான நான்கு வண்ண வாக்கு சீட்டுகள், அழிய மை, சீல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சாக்கு பைகள் மற்றும் வாக்கு பதிவு பெட்டிகள் வாகனங்கள் முலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோன்று, வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கும், வாக்குசீட்டுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பப்பட்டது. 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 5 யூனியன் பகுதிகளில் உள்ள 574 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com