சென்னைவாசிகளுக்கு ஆறுதல்... வெகுவாக குறையும் 2ஆம் அலை...

சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு முதல் அலையை காட்டிலும் 2ம் அலையில் வெகுவாக குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னைவாசிகளுக்கு ஆறுதல்... வெகுவாக குறையும் 2ஆம் அலை...
Published on
Updated on
1 min read
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
கொரோனா முதல் அலையை காட்டிலும்,இரண்டாம் அலையில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டதோடு உயிரிழப்புகளும் அதிகரித்தது.
கொரோனா முதல் அலையை பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் 2020க்கு மேல் படிப்படியாக குறைய தொடங்கியது. 2021 பிப்ரவரி மாதம் 1ம் தேதி குறைந்தபட்சமாக சென்னையில் 134 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதன் பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியதன் காரணமாக மே மாதம் 24ம் தேதி முதல் ஜுன் மாதம் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..பின், பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா முதல் அலையை காட்டிலும், சென்னையில் தற்போது தினசரி பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், கொரோனா முதல் அலையில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்தபட்சமாக 134 என்று பதிவாகி இருந்தது. எனவே, அதனை முறியடிக்கும் விதமாக கொரோனா 2ம் அலையில் சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த ஜூலை 22ம் தேதி 133 என பதிவாகியது. பின்னர் படிப்படியாக குறைந்து சென்னை சென்னையில் 126 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 22 - 133
ஜூலை 23 - 130
ஜூலை 24 - 127
ஜூலை 25 - 126
வரும் நாட்களில் சென்னையில் தினசரி பாதிப்பு மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com