"ஆம்புலன்சில் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்" பெட்ரோல் பங்க் விபத்தில் உயிரிழந்தவரின் மகன் பேட்டி!

"காயமடைந்த தனது தந்தையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வந்திருந்தால் முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றி இருக்கலாம்" என பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த கந்தசாமியின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில், நேற்று மாலை நகரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் மழைக்கு ஒதுங்கியவர்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். பலத்த காற்று காரணமாக பெட்ரோல் பங்கில் உள்ள இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்தது. அதில் 30 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிக்கினர். 

அவர்களை மீட்க அக்கம் பக்கதினர் போராடினர். எனினும் மேற்கூரை கணமாக இருந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இடிபாடிகளில் சிக்கியவர்கல் மீட்கப்பட்டனர். இந்த திடீர் விபத்தால் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த கந்தசாமி என்பர் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் கந்தசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காயம்பட்ட தனது தந்தையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லாமல் ஆடு, மாடு போல் ஒரு ஆம்னி பேருந்தில் அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என உயிரிழந்த கந்தசாமி மகன் தெரிவித்தார். 9 வருடமாக இந்த பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த தனது தந்தையை மனிதாபிமானமாக கூட உயிரை காப்பாற்றமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளது. பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என கந்தசாமியின் மகன் கேட்டுக் கொண்டார் 

இந்த விப்த்தில் மொத்தம் 20 பேர் காயமடைந்த நிலையில் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com