சென்னையில் 10 நாளில் கொசு பரவல் கட்டுபடுத்தபடும் - துணை மேயர்

சென்னையில் 10 நாளில் கொசு பரவல் கட்டுபடுத்தபடும் - துணை மேயர்

10 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு பரவல் கட்டுபடுத்தபடும் ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது கொசுத்தொல்லை சம்பந்தமான பொதுமக்கள் புகார் 30 சதவீதம் குறைந்திருக்கிறது

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் பேட்டி

ரங்கா ஸ்டீல்ஸ் தனியார் நிறுவனம் ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகள் உடன் கூடிய கால்நடைகளுக்கான நடமாடும்  அவசர ஊர்தியை ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு வழங்கினர்.அந்த வாகனத்தை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

பொதுமக்கள் தெரு நாய்களின் மீது மனிதாபிமான முறையில் அன்பு செலுத்த வேண்டும் சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கு தனி கவனம் அளித்து வருகிறோம் என்று கூறினார். ஒரு மாதத்திற்கு 1500 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் பெண்  நாய்களுக்கு மட்டும் அல்ல ஆண் நாய்களுக்கும் கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது கொசுத்தொல்லை காரணமாக பொதுமக்களின் புகார் அளவு 30 சதவீதம் குறைந்து இருக்கிறது.தீவிரமாக கொசு ஒழிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது அடுத்த பத்து நாட்களுக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தா

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com