இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்... 2 நாட்களில் 69 மீனவர்கள் சிறைபிடிப்பு.. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததால், தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்... 2 நாட்களில் 69 மீனவர்கள் சிறைபிடிப்பு.. 
Published on
Updated on
1 min read

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டையை சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com