மழை, வெள்ள காலங்களில் மக்களை காக்க தவறிவிட்டது தமிழக அரசு...பால். உடை, உணவுக்காக கையேந்தும் நிலை....சீமான் குற்றச்சாட்டு...!

மழை வெள்ள காலங்களில் மக்களைக் காப்பதில் தமிழக அரசு  தவறி விட்டது என நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மழை, வெள்ள காலங்களில் மக்களை காக்க தவறிவிட்டது தமிழக அரசு...பால். உடை, உணவுக்காக கையேந்தும் நிலை....சீமான் குற்றச்சாட்டு...!

சென்னை செங்குன்றத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், 

மழை வெள்ள காலங்களில் நம் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாரம் இல்லை, பாலில்லை, உணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இது ஒரு நாள் பிரச்சனை அல்ல, 50 ஆண்டுகாலமாக நீடிக்கிறது, ஒரு வேளை உணவிற்குக் கூட மக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் இந்தநிலமை தொடர்கிறது, இது மாற வேண்டும் என்றார். மழை காலத்தில் கோவமாய் இருக்கும் மக்கள் மழைகாலம் முடிந்ததும் மறந்து விடுவதால் மாற்றம் இந்த மண்ணில் வருவதில்லை இந்த கொடுமை தொடர்கிறது என கூறினார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சீரமைத்து உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என கூறிய அவர், புதிய வீடுகளை அனைத்து முகாம்களிலும் கட்டி தருவேன் என்று முன்வந்துள்ள தமிழக அரசின் செயலை வரவேற்ப்பதாக அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com