சென்னை பல்கலைக்கழகம் தனது நன்மதிப்பை இழந்து வருகிறது- உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை பல்கலைக்கழகம் தனது நன்மதிப்பை இழந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் தனது நன்மதிப்பை இழந்து வருகிறது-  உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை பல்கலைக்கழகம் தனது நன்மதிப்பை இழந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அப்பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக இருந்த பாஸ்கருக்கு, கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதை பெருமையாக கருதிய காலம் போய்விட்டதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு சேவையை ஆகியவற்றை பேணி பாதுகாக்காத அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையுடன்,  பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில்  பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டனர். எனவே பாஸ்கருக்கு 
பதவி உயர்வு வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com