மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைக்க சென்றபோது,சௌமியா என்ற இளம்பெண் ஒருவர்,கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 பவுன் செயினையும்,மேலும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.
இதனையடுத்து,அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஜே.எஸ்.டபுள்யு (தனியார்) நிறுவனத்தில் மாதம் 17ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனை சௌமியாவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வழங்கியுள்ளார்.