மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எது..? வானிலை ஆய்வு மையத்தின் தகவல்..!

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எது..? வானிலை ஆய்வு மையத்தின் தகவல்..!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு 540 கி.மீட்டர் தொலைவிலும், இலங்கைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும்  தற்போது நிலை கொண்டுள்ளது. இது மேலும் அடுத்த சில மணி நேரத்திற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

25 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகம் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராம்நாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் 23 லிருந்து 25 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சுறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தை விட 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி குமரி கடல் பகுதி மன்னர் வளைகுடா மற்றும் மேற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்க : உருமாறிய கொரோனா வைரஸ் எதிரொலி..! சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை...!