தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சலவை பட்டறை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி அடுத்த சக்கம்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சலவை, அயனிங் செய்து, சந்தைப்படுத்தி வருகின்றனர்.
சலவை பட்டறை கழிவு நீரால் மாசு ஏற்படுவதாக வழக்கு
சலவை செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சலவை பட்டறைகளுக்கு தடை விதித்த நீதிமன்றம்
இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட சலவை பட்டறைகள் உள்ளன. இந்நிலையில், இங்கிருந்து வெளிவரும் கழிவு நீரால் மாசு ஏற்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சலவை பட்டறைகள் செயல்பட நீதிமன்றம் தடை விதித்ததுடன், சலவை பட்டறைகளுக்கான மின் இணைப்பையும் துண்டித்தது.
2 மாதங்களாக வாழ்வாதாரமின்றி தவித்த தொழிலாளர்கள்
இதனால், கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சலவைத் தொழிலாளிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சலவைப் பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.