ஒமிக்ரானை தடுக்க இரண்டு வழிகள் தான்...  அமைச்சர் மா.சுப்ரமணியன்  எச்சரிக்கை...

டெல்டா கொரோனாவைக் காட்டிலும் 5 மடங்கு அதிவேகமாகப் பரவக் கூடிய ஒமிக்ரானை தடுக்க இரண்டு வழிகள் தான் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரானை தடுக்க இரண்டு வழிகள் தான்...  அமைச்சர் மா.சுப்ரமணியன்  எச்சரிக்கை...

ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. டெல்டா கொரோனாவைக் காட்டிலும் 5 மடங்கு அதிவேகமாகப் பரவக் கூடியது. அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவு தான் என்ற போதிலும் பிரிட்டன் நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் உயிரிழந்திருப்பது மக்களை கலக்கமடைய செய்துள்ளது.

இந்தியாவிற்குள்ளும் நுழைந்து இதுவரை 65 பேரை தாக்கியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒமைக்ரான் கொரோனா பரவிவிட்டது. இதனால் தமிழ்நாட்டு எல்லைகளில் அதீத கவனம் செலுத்த தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய விமான நிலையங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இத்தகையை பரபரப்பான சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், " ஒமைக்ரான் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ள, 7 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் சோதனை முடிவுகள் தெரிந்துவிடும்.

இதுவரை பரவிய கொரோனா வகைகளை காட்டிலும், ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவக்கூடியது.  ஆகவே முகக்கவசம், தடுப்பூசி ஆகிய இரண்டுமே சிறந்த தீர்வு. விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். 12 ஆயிரத்து 39 பேர் ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். தீவிரமாகக் கண்காணிக்கிறோம்" என்றார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com