”பேனா சின்னம் இல்லை....” தமிழிசை சௌந்தரராஜன்!!!

”பேனா சின்னம் இல்லை....”  தமிழிசை சௌந்தரராஜன்!!!

எழுத்துக்கள்தான் கருணாநிதிக்கு அடையாளமே தவிர பேனா சின்னம் இல்லை என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.  

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உலக பொறியியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று உரையாற்றினார்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், நான் வேறு கொள்கைகளை கோண்டிருந்தாலும் வேறு பாதையில் பயணித்தாலும் கலைஞரின் எழுத்துக்கள் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு என தெரிவித்தார்.   மேலும் எழுத்துக்கள்தான் கருணாநிதிக்கு அடையாளமே தவிர பேனா இல்லை தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com