பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக அறிவித்ததை அடுத்து இதுகுறித்து பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் எந்த ஒரு கருத்தையும் கூறக்கூடாது என தலைமை அறிவித்ததாக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
சென்னை அடுத்த பல்லாவரத்தில் அதிமுகவின் பல்லாவரம் பகுதி கழக செயலாளர் த.ஜெயபிரகாஷ் தலைமையில், நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில் பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அடிமைக் கட்சி அடிமை கட்சி என நேற்று வரையிலும் கூறிக் கொண்டிருந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூக்கை உடைத்தது போல் ஒரு அறிவிப்பை இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி எடுத்துள்ளதாக கூறினார்.
இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.தன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!