சிவில் நீதிபதி தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்களை வெளியே நிறுத்தியதால் வாக்குவாதம்...!

சிவில் நீதிபதி தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்களை வெளியே நிறுத்தியதால் வாக்குவாதம்...!
Published on
Updated on
1 min read

சிவில் நீதிபதி முதல் நிலை எழுத்து தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்களை தாமதமாக வந்ததாக கூறி, அசோக் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவில் நீதிமன்றங்களில், 245 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் தரப்பட்டு சிவில் நீதிபதி எழுத்து தேர்வு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் தனியார் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 25 பேரை, தாமதமாக வந்ததாக கூறி வெளியே நிறுத்தி வைக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை 9:30 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், பலரும் 9:05 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் உள்ள பலருக்கும் சென்னையை தேர்வு மையமாக போட்டிருப்பதால் பலரும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சிவில் நீதிபதி தேர்வு எழுத வந்தவர்கள், தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். இந்த வருடம் தேர்வு எழுதாமல் போனால் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை இருப்பதால் உள்ளே அனுமதிக்க கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு மேற்பார்வையாளர்களான தேர்வு பொறுப்பு நீதிபதிகளை சந்திக்கவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com