மதுரை மாவட்டம்: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் புதுப்பட்டியைச் சேர்ந்த தமிழ் பாண்டி என்பவர் தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். விவசாயியான இவரது பசுமாடு இன்று காலை 11 மணி அளவில் 3 கன்றுகளை ஈன்றுள்ளது.
இதில் இரண்டு ஆண் கன்றுகள் மற்றும் ஒன்று பெண் கன்று. ஒரே நேரத்தில் மூன்று கன்றுகளை பசுமாடு ஈன்றது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது . மேலும், இவர் கூறும் போது விவசாய தோட்டம் மற்றும் மாடுகளை வளர்த்து பால்பண்ணைக்கு தொடர்ந்து பால் விற்பனை செய்து வருவதாகவும் இன்று பசுமாடு மூன்று கன்றுகளை ஈன்றது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அழகான பிஸ்கெட் நிறத்தில் இருக்கும் பசுமாட்டிற்கு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் அழகாக பிறந்துள்ள அந்த கன்றுகளை எழுப்பி சீம்பாலைக் குடிக்க வைத்தார் விவசாயி. இந்த நெகிழ்ச்சியான சம்பவம், அங்குள்ள மக்கள் மனதை லேசாக்கியுள்ளது.