சுங்கக் கட்டண உயர்வு…!வாகன ஓட்டிகள் வருத்தம்..!

சுங்கக் கட்டண உயர்வு…!வாகன ஓட்டிகள் வருத்தம்..!

சுங்க சாவடி கட்டணம்  நள்ளிரவு 12  முதல் உயர்த்தப்பட்டதால்  அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் வருத்தம்  தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி  முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்

இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு சுங்கச்சாவடியில் ரூ 5 முதல் 40 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை உயர்வதாகவும் ,சுங்கம் கட்டணத்தை உயர்த்தியதன் விளைவாக மக்களிடம் வாடகை கட்டணத்தை உயர்த்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் வாகன ஒட்டிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எவ்வித அடிப்படை வசதிகளும் தேசிய நெடுஞ்சாலைகளில் செய்து தரப்படாத நிலையில் சுங்கம் கட்டண உயர்வுக்கு  வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சுங்கம் கட்டண உயர்வு, தங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும்  . அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com