கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி... கட்டுக்குள் வராத காய்கறிகள் விலை... 

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி... கட்டுக்குள் வராத காய்கறிகள் விலை... 

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் மழை ஓய்ந்த போதிலும் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

பெரும்பாலான காய்கறிகள் கிலோ 40-ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கை  கிலோ 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, கேரட், கத்தரிக்காய், காராமணி, அவரைக்காய் போன்ற காய்கறிகள் கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  தொடர் மழை காரணமாக செடிகளில் காய் பிடிப்பது குறைந்துள்ளதாலும், பயிற்கள் சேதமடைந்துள்ளதாலும் காய்கறிகளின் விலை கட்டுக்குள் வராததற்கு காரணமாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com