செல்போனில் பாட்டை கேட்டு ட்ராக்கை மறந்த இளைஞர்.! இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலி.! 

செல்போனில் பாட்டை கேட்டு ட்ராக்கை மறந்த இளைஞர்.! இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலி.! 
Published on
Updated on
1 min read

வாணியம்பாடியில் செல்போனில் பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற போது விரைவு இரயில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு  பகுதியை சேர்ந்தவர் அஜீத்(25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு வந்துள்ளார். 


இந்நிலையில் இன்று அவருடைய வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்க செயிண்ட் உள்ளார். அப்போது தன்னுடைய செல்போனில் மூலம்  காதில் இயர் போன் பொருத்தி பாடல் கேட்டவாறு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது  சென்னையிலிருந்து கோவை நோக்கி  சென்ற விரைவு இரயில் அந்த இளைஞர் மீது மோதியதில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com