ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது!

ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது!
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் 17 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு   அவரது தந்தை  அருகில் உள்ள நகரமான வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில்  பொதுமக்களுக்கு  2000 மரக்கன்றுகள் வழங்க வேப்பூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.

 மரக்கன்று நட அனுமதி மறுத்த காவல்துறை

 அதற்கு வேப்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் குடும்பத்தினர் மரக்கன்று வழங்க அனுமதி கேட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவும் மேலும் அந்த இடம் அதிக மக்கள் கூடும் இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்திருந்தனர்.

 சொந்த ஊரில் மரக்கன்று வழங்கினர்

 இதனையடுத்து ஸ்ரீமதியின்  சொந்த கிராமத்திலேயே அவரது பெற்றோர்கள் மரக்கன்று வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்ய பட்ட இடத்தில் அவரது பெற்றோர் மலர் மாலை வைத்து ஏற்கனவே பிறந்தநாளுக்காக  எடுத்து வைத்திருந்த புத்தாடையை வைத்து வணங்கினர். பின்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் நான்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமதி திருவுருவப் படத்தை பார்த்த அவரது தாயார் கதறி அழுதார். பின்னர் அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com