பரமக்குடி சென்ற உதயநிதி…இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி!

பரமக்குடி சென்ற உதயநிதி…இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி!
Published on
Updated on
1 min read

இமானுவேல் சேகரன்  நினைவு நாளில் பரமக்குடியில் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளான் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்

இமானுவேல் சேகரன்

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவராக அறியப்படுபவர் தான் இமானுவேல் சேகரன். இமானுவேல் சேகரன். இவர் 11 செப்டம்பர் 1957 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதால் கொல்லப்பட்டார். ஆண்டுதோறும் இவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக இயக்கங்களும் பங்கேற்பது வழக்கம்.

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் 65 ஆ  வது  நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள் , ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கே‌.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கயல்விழி, பெரியகருப்பன் ஆகியோர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com