டீசல் விலையை குறைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டீசல் விலையை குறைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார். டீசல் விலையுயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்வதாகவும் கூறியுள்ளார். எனவே, டீசல் விலையை மாநில அரசு சார்பில் ஓரளவு குறைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com