இபிஎஸ் அணிக்கு வைத்தியலிங்கம் சவால்...!

இபிஎஸ் அணிக்கு வைத்தியலிங்கம் சவால்...!

டாக்டர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எந்த கிரிமினல் வழக்கு போட்டாலும் தாங்கள் சந்திக்க தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சவால் விடுத்துள்ளார்.  

திருச்சியில் வரும் 24ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தை ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம், தமிழ்நாட்டில் இன்னும் பல மாநாடுகளை நடத்துவோம் எனவும்,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் தான் இருக்கிறார் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், டாக்டர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எந்த கிரிமினல் வழக்கு போட்டாலும் தாங்கள் சந்திக்க தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சவால் விடுத்துள்ளார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com