சென்னை வந்தடைந்த வந்தே பாரத்; பொதுமக்கள் வரவேற்பு!

நெல்லையில் இருந்து சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். 

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வழித்தடங்கள் உட்பட நாடு 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  இந்த நிலையில்  சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் உதய்பூர் - ஜெய்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை உட்பட  11 மாநிலங்களில் இயங்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் விருதுநகா், திண்டுக்கல், மதுரை, திருச்சி வழியாக இரவு 10 மணியளவில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com