வாகனத் தணிக்கையின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாகன ஆய்வாளர் உயிரிழப்பு...

கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகனத் தணிக்கையின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாகன ஆய்வாளர் உயிரிழப்பு...
Published on
Updated on
1 min read

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக கனகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அவர் மீது பலமாக மோதி விட்டு அந்த வாகனம் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த கனகராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com